விசாகப்பட்டினம் மாவட்டம்
விசாகப்பட்டினம் மாவட்டம் | |
---|---|
இருப்பிடம்: விசாகப்பட்டினம் மாவட்டம் , ஆந்திரப் பிரதேசம் , இந்தியா | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
தலைநகரம் | விசாகப்பட்டினம் |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | டாக்டர்.மல்லிகார்ஜு இ.ஆ.ப. |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
இணையதளம் | visakhapatnam |
விசாகப்பட்டினம் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் விசாகப்பட்டினம் நகரில் உள்ளது. 1,048 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 5,832,336 மக்கள் வாழ்கிறார்கள். இந்த மாவட்டம் ஆந்திரப் பிரதேசத்தின் ஒன்பது கடலோர மாவட்டங்களில் ஒன்றாகும். விசாகப்பட்டின மாவட்டம் வடக்கில் ஒடிசாவினாலும், கிழக்கில் விசயநகர மாவட்டம், தென்மேற்கில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தினாலும், தெற்கே வங்காள விரிகுடாவினாலும் சூழப்பட்டுள்ளது.[1]
மாவட்டம் பிரிப்பு
இம்மாவட்டத்தின் சில வருவாய் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிய அனகாபள்ளி மாவட்டம் மற்றும் அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3]
வரலாறு
இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் போது விசாகப்பட்டினம் ஒரு மாவட்டமாக உருவெடுத்தது. 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் பிரிக்கப்பட்டு பீகார் மாகாணம் மற்றும் ஒரிசா மாகாணம் அமைக்கப்பட்டது . விசாகப்பட்டின மாவட்டத்தின் பகுதிகளான நபரங்பூர், மல்கங்கிரி , கோராபுட், ஜெய்பூர், ராயகடா ஆகியவையும், மற்றும் சென்னை மாகாணத்தின் கஞ்சம் மாவட்டத்தின் இச்சாபுரம் , பாலாசா , தெக்காலி , பதப்பட்டினம் மற்றும் ஸ்ரீகாகுளம் தவிர்ந்த ஏனைய பகுதிகளும் ஒரிசா மாகாணத்திற்கு மாற்றப்பட்டது.[4]
1950 ஆம் ஆண்டில் சிறீகாகுளம் மாவட்டம் முந்தைய விசாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து செதுக்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டில் விசயநகர மாவட்டத்தை உருவாக்க மாவட்டத்தின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டது.[5]
விசாகப்பட்டினம் மாவட்டம் தற்போது சிவப்பு தாழ்வாரத்தின் ஒரு பகுதியாகும்.[6]
புவியியல்
விசாகப்பட்டினம் மாவட்டம் சுமார் 1048 சதுர கிலோமீற்றர் (4,309 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[7] பரப்பளவில் இந்த மாவட்டம் கனடாவின் கேப் பிரெட்டன் தீவுக்கு ஒப்பீட்டளவில் சமம் ஆகும்.[8]
புள்ளிவிபரங்கள்
2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி விசாகப்பட்டினம் மாவட்டத்தின் 4,290,589 வசிக்கின்றனர்.[9] இது இந்தியாவில் 640 மாவட்டங்களில் 44 வது இடத்தையும், ஆந்திர மாநிலத்தில்) 4 வது இடத்தையும் பெறுகின்றது. மாவட்டத்தில் சதுர கிலோமீற்றருக்கு (990 / சதுர மைல்) 384 மக்கள் அடர்த்தி உள்ளது. 2001–2011 காலப்பகுதியில் மாவட்டத்தின் சனத்தொகை வளர்ச்சி விகிதம் 11.89% ஆகும். விசாகப்பட்டின மாவட்டம் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 1003 பெண்கள் என்ற பாலின விகிதத்தை கொண்டுள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதம் 67.7% ஆகும்.[9]
பொருளாதாரம்
மாவட்டத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜி.டி.டி.பி ) 73,276 கோடி (அமெரிக்க $ 11 பில்லியன்) ஆகும். இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி) 14% வீத பங்களிக்கிறது. விவசாயத்தில் கரும்பு, நெல், வெற்றிலை, மா, பால், இறைச்சி மற்றும் மீன்வளம் என்பனவும், தொழில்துறை மற்றும் சேவைத் துறையில் கட்டுமானம், சிறு கனிமங்கள், மென்பொருள் சேவைகள் மற்றும் அமைப்புசாரா வர்த்தகங்கள் ஆகியவையும் பொருளாதாரத்தில் பங்கு வகிக்கின்றன.[10]
கல்வி
ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி கல்வி மாநில, உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளால், மாநில பள்ளி கல்வித் துறையின் கீழ் வழங்கப்படுகிறது. மாவட்டத்தின் தொடக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 609,587 ஆகும்.[11]
பௌத்த தொல்லியல் களங்கள்
இம்மாவட்டத்தின் தலைமையிடமான விசாகப்பட்டினம் நகரத்திற்கு அருகில் உள்ள மலைக் குன்றுகளில் கிமு இரண்டாம் நூற்றாண்டின் பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்ட பவிகொண்டா, தொட்டலகொண்டா, போஜ்ஜன்ன கொண்டா வளாகங்கள் உள்ளது.
தட்பவெப்ப நிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், விசாகப்பட்டினம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 28.9 (84) |
31.3 (88.3) |
33.8 (92.8) |
35.3 (95.5) |
36.2 (97.2) |
35.3 (95.5) |
32.9 (91.2) |
32.7 (90.9) |
32.5 (90.5) |
31.7 (89.1) |
30.4 (86.7) |
28.9 (84) |
32.5 (90.5) |
தாழ் சராசரி °C (°F) | 18.0 (64.4) |
19.9 (67.8) |
23.0 (73.4) |
26.1 (79) |
27.7 (81.9) |
27.3 (81.1) |
26.1 (79) |
26.0 (78.8) |
25.6 (78.1) |
24.3 (75.7) |
21.6 (70.9) |
18.6 (65.5) |
23.7 (74.7) |
பொழிவு mm (inches) | 11.4 (0.449) |
7.7 (0.303) |
7.5 (0.295) |
27.6 (1.087) |
57.8 (2.276) |
105.6 (4.157) |
134.6 (5.299) |
141.2 (5.559) |
174.8 (6.882) |
204.3 (8.043) |
65.3 (2.571) |
7.9 (0.311) |
945.7 (37.232) |
ஆதாரம்: [12] |
ஆட்சிப் பிரிவுகள்
மாவட்டத்தில் அனகபள்ளி, படேரு, நரசிபட்னம் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நான்கு வருவாய் பிரிவுகளும் துணை ஆட்சியரின் தலைமையில் அமைந்துள்ளன. இந்த வருவாய் பிரிவுகள் மாவட்டத்தில் 46 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் 3265 கிராமங்கள் மற்றும் 15 நகரங்கள் காணப்படுகின்றன. விசாகப்பட்டினம் பிரிவில் 13 மண்டலங்களும், நர்சிபட்டினம், அனகபள்ளி மற்றும் படேரு பிரிவுகளில் தலா 11 மண்டலங்களும் உள்ளன.[13]
இந்த மாவட்டத்தில் அனகாபல்லி, விசாகப்பட்டினம், அரக்கு ஆகிய மூன்று பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன.
இந்த மாவட்டத்தில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[14]
அவை:
- அனகாபல்லி,
- சோடவரம்
- எலமஞ்சிலி
- மாடுகுலா
- நர்சிபட்டினம்
- பாடேரு
- பெந்துர்த்தி
- பாயகராவுபேட்டை
- அரக்கு
- கிழக்கு விசாகப்பட்டினம்
- மேற்கு விசாகப்பட்டினம்
- வடக்கு விசாகப்பட்டினம்
- தெற்கு விசாகப்பட்டினம்
- காஜுவாக்கா.
- பீமிலி
இந்த மாவட்டத்தில் 43 மண்டலங்கள் உள்ளன.[15][16].
எண் | பெயர் | எண் | பெயர்! எண் | பெயர் | |
---|---|---|---|---|---|
1 | முஞ்சங்கிபுட்டு | 15 | கொலுகொண்டா | 28 | விசாகப்பட்டினம் மண்டலம் |
2 | பெதபயலு | 16 | நாதவரம் | 29 | விசாகப்பட்டினம் |
3 | ஹுகும்பேட்டை | 17 | நர்சிபட்டினம் | 30 | காஜுவாக்கா |
4 | டும்பிரிகுடா | 18 | ரோலுகுண்டா | 31 | பெதகண்டியாடா |
5 | அரக்கு | 19 | ராவிகமதம் | 32 | பரவாடா |
6 | அனந்தகிரி | 20 | புச்செய்யப்பேட்டை | 33 | அனகாபல்லி |
7 | தேவராபல்லி | 21 | சோடவரம் | 34 | முனகபாகா |
8 | சீடிகாடா | 22 | கே.கோட்டபாடு | 35 | கசிங்கோட்டை |
9 | மாடுகுலா | 23 | சப்பவரம் | 36 | மாகவரபாலம் |
10 | பாடேரு | 24 | பெந்துர்த்தி | 37 | கோட்டை உரட்லா |
11 | கங்கராஜு மாடுகுலா | 25 | ஆனந்தபுரம் | 38 | பாயகராவுபேட்டை |
12 | சிந்தபல்லி | 26 | பத்மநாபம் | 39 | நக்கபல்லி |
13 | கூடம் கொத்தவீதி | 27 | பீமுனிப்பட்டினம் | 40 | சிருங்கராயவரம் |
14 | கொய்யூர் | 41 | எலமஞ்சிலி | 42 | ராம்பில்லி |
43 | அச்சுதாபுரம் |
வழிபாட்டுத்தலங்கள்
எண்டோவ்மென்ட்ஸ் துறையின் நிர்வாகத்தின் கீழ் முப்பத்தாறு கோயில்கள் உள்ளன.[17]
போக்குவரத்து
மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகளின் மொத்த சாலை நீளம் 964 கிமீ (599 மைல்) ஆகும்.[18]
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புக்கள்
- ஆந்திரப் பிரதேச அரசின் இணையதளத்தில் பரணிடப்பட்டது 2012-03-13 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்
- ↑ "District Census Hand Book : Visakhapatnam (Part A)" (PDF).
{cite web}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ With creation of 13 new districts, AP now has 26 districts
- ↑ ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்
- ↑ "Provinces of British India". www.worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
- ↑ "India Districts". www.statoids.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
- ↑ "NAXAL MENACE : 83 districts under the Security Related Expenditure Scheme". IntelliBriefs. 2009-12-11. Archived from the original on 2011-10-27. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Andhra Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. pp. 1111–1112. ISBN 978-81-230-1617-7.
- ↑ "Island Directory Tables: Islands by Land Area". islands.unep.ch. Archived from the original on 2018-02-20. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
{cite web}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 9.0 9.1 "Indian Districts by Population, Sex Ratio, Literacy 2011 Census". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
- ↑ "Economic Development Board Andhra Pradesh - Infrastructure". apedb.gov.in. Archived from the original on 2018-06-29. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
- ↑ "CSE". web.archive.org. 2015-05-22. Archived from the original on 2015-05-22. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
{cite web}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Visakhapatnam". இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். May 2011. பார்க்கப்பட்ட நாள் 2010-03-26.
- ↑ "Adminsistrative divisions of Visakhapatnam district".
{cite web}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ District-wise Assembly Constituencies in Andhra Pradesh
- ↑ "Mandals in Visakhapatnam district". AP State Portal. Archived from the original on 19 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
{cite web}
: Check date values in:|archive-date=
(help) - ↑ ஊராட்சி மன்ற இணையத்தளம் விசாகபட்டினம் வட்டத்தைப் பற்றிய விவரங்கள் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம். சூன் 30, 2007
- ↑ "Trust Boards Abstract". tms.ap.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
{cite web}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Wayback Machine" (PDF). web.archive.org. 2018-09-20. Archived from the original on 2018-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
{cite web}
: CS1 maint: unfit URL (link)