மரகத பங்கஜன்
மரகத பங்கஜன் Marakata Pangkaja | |||||
---|---|---|---|---|---|
Dharmawangsa Wardhana Marakatapangkaja | |||||
பாலி இராச்சியம் | |||||
ஆட்சிக்காலம் | 1022 – 1049 | ||||
முன்னையவர் | உதயனா வருமதேவன் குணப்பிரியா தருமபத்தினி செரி அஜனாதேவி | ||||
பின்னையவர் | அனாக் உங்குஸ் | ||||
| |||||
மரபு | வர்மதேவ வம்சம் | ||||
தந்தை | உதயனா வருமதேவன் | ||||
தாய் | குணப்பிரியா தருமபத்தினி | ||||
மதம் | இந்து சமயம் |
மரகத பங்கஜன் அல்லது தருமவங்ச மரகத பங்கஜன் (ஆங்கிலம்: Marakata Pangkaja அல்லது Dharmawangsa Wardhana Marakatapangkaja; இந்தோனேசியம்: Çri Dharmawangsa Wardhana Marakata Pangkajastanottunggadewa) என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழியின் அரசர் ஆவார். பாலி இராச்சியத்தின் அரசர்கள் வரிசையில் இவர் பத்தாவது இடத்தில் உள்ளார். இவரின் ஆட்சிக்காலம் கிபி 1022 – 1049.[1]
இவர் பாலினிய அரசர் உதயனா வருமதேவன் மற்றும் பாலினிய அரசி குணப்பிரியா தருமபத்தினி ஆகியோரின் இரண்டாவது மகன் ஆவார்.[2]
இவரின் ஆட்சிக்காலம், ஜாவாவில் மாதரம் இராச்சியத்தை ஆட்சி செய்த இவரின் மூத்த சகோதரர் மன்னர் ஏர்லங்காவின் ஆட்சிக் காலத்துடன் ஒத்துப்போகிறது.[3][2] இவர் இறந்த பிறகு, பாலியை ஆட்சி செய்த அடுத்த மன்னர் இவரின் தம்பி, மன்னர் அனாக் உங்குஸ் ஆவார்.[4][4]
பவாகன் பி கல்வெட்டு
பாலியில் கிடைத்த பல கல்வெட்டுகளில், விஷ்ணுவைப் போன்ற ஓர் ஆட்சியாளராக மரகத பங்கஜன் சித்தரிக்கப் படுகிறார்; அவர் துன்பப்படும் தம் மக்களுக்கு உதவிகள் செய்து இருப்பதாகவும் குறிக்கப்பட்டு இருக்கிறார். [2]
விறகுகள் சேகரிப்பதற்கும்; கால்நடைகளை வளர்ப்பதற்கும் போதுமான நிலம் இல்லாததால்; அரச வேட்டை நிலத்தின் ஒரு பகுதியை வழங்குமாறு பவாகன் கிராம மக்களின் கோரிக்கையை மன்னர் மரகத பங்கஜன் ஏற்றுக் கொண்டதாக பவாகன் பி கல்வெட்டு (Bwahan B inscription) கூறுகிறது.[3]
பாலி தீவில் கிடைத்த கல்வெட்டுகளில் குறைந்தது 10 கல்வெட்டுகளில், மரகத பங்கஜத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.[5]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Marwati Djoened Poesponegoro, Nugroho Notosusanto: Sejarah nasional Indonesia: untuk SMP. Departemen Pendidikan dan Kebudayaan, 1984
- ↑ 2.0 2.1 2.2 Phalgunadi, I. Gusti Putu (1991). Evolution of Hindu Culture in Bali: From the Earliest Period to the Present Time. Sundeep Prakashan. pp. 50–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185067650.
- ↑ 3.0 3.1 Lansing, J. Stephen (2012). Perfect Order: Recognizing Complexity in Bali. Vol. 22 of Princeton Studies in Complexity (illustrated, reprint ed.). Princeton University Press. p. 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691156262.
- ↑ 4.0 4.1 Hauser-Schäublin, Brigitta; Ardika, I Wayan (2008). Burials, Texts and Rituals: Ethnoarchaeological Investigations in North Bali, Indonesia. Universitätsverlag Göttingen. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783940344120.
- ↑ Citramanik, Luh Gede Ratna; Laksmi, Ni Ketut Puji Astiti. "The Role of Religious Figures in the Government Bureaucracy of King Marakata". Humanis: Journal of Arts and Humanities 23.3 Agustus 2019: 224–231. https://ojs.unud.ac.id/index.php/sastra/article/download/49895/31533/.
சான்றுகள்
- Willard A. Hanna (2004). Bali Chronicles. Periplus, Singapore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7946-0272-X.