வடக்கு அரைக்கோளம்
வடக்கு அரைக்கோளம் (Northern Hemisphere) என்பது, புவிமையக் கோட்டுக்கு வடக்கேயுள்ள மேற்பரப்பைக் குறிக்கும். பூமியில், நிலத்தின் பெரும் பகுதியும், 70 - 75% மக்கள் தொகையும், வட அரைக்கோளத்திலேயே உள்ளன.
ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்கள் முழுமையாகவும், இந்தோனீசியாவின் ஒரு பகுதி தவிர்ந்த ஆசியாக் கண்டமும், அமேசான் நதிக்கு வடக்கிலுள்ள தென்னமெரிக்கப் பகுதிகளும், 2/3 பங்கு ஆபிரிக்கக் கண்டமும் வட அரைக்கோளப் பகுதியிலேயே அமைந்துள்ளன.