ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்

ஆந்திரப் பிரதேச ஆளுநர்
தற்போது
எசு. அப்துல் நசீர்

13 பெப்ரவரி 2023 (2023-02-13) முதல்
வாழுமிடம்ஆளுநர் இல்லம், விசயவாடா, ஆந்திரப் பிரதேசம்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்5 ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்சந்துலால் மாதவ்லால் திரிவேதி
உருவாக்கம்1 நவம்பர் 1956; 68 ஆண்டுகள் முன்னர் (1956-11-01)
இணையதளம்www.rajbhavan.ap.gov.in

ஆந்திரப் பிரதேச ஆளுநர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் மாநிலத் தலைவர் ஆவார். 1953 முதல் இன்று வரை பதவியில் உள்ள ஆந்திர மாநிலம் மற்றும் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசம் உட்பட ஆந்திரப் பிரதேசத்தின் ஆளுநர்களின் பட்டியல் இது. விசயவாடாவில் அமைந்துள்ள ஆளுநர் இல்லம் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லம். ஈ. சீ. இல. நரசிம்மன் நீண்ட காலம் ஆளுநராக பதவி வகித்தவர். 13 பெப்ரவரி 2023 முதல் தற்போதைய பதவியில் சையத் அப்துல் நசீர் உள்ளார்.

ஆந்திரப் பிரதேச வரைபடம்

பட்டியல்

ஆந்திர மாநில ஆளுநர்களின் பட்டியல்

ஆந்திர மாநில ஆளுநர்கள், வடக்கு ஆந்திரா, கடற்கரை ஆந்திரா மற்றும் இராயலசீமை பகுதிகளை உள்ளடக்கியது ஆந்திர மாநிலம். இந்த மாநிலம் 1953 இல் மெட்ராஸ் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் (1953–1956)

ஆந்திர பிரதேச மாநில போர்ட்டலில் இருந்து தரவு.[1]

# பெயர் உருவப்படம் பதவி ஆரம்பம் பதவி முடிவு கால அளவு நியமித்தவர்
1 சந்துலால் மாதவ்லால் திரிவேதி 1 அக்டோபர் 1953 31 அக்டோபர் 1956 3 ஆண்டுகள், 30 நாட்கள் இராசேந்திர பிரசாத்

ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்

நவம்பர் 1, 1956 அன்று, ஐதராபாத் மாநிலம் ஒழிக்கப்பட்டது; அதன் குல்பர்கா மற்றும் அவுரங்காபாத் கோட்டங்கள் முறையே மைசூர் மாநிலம் மற்றும் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. அதன் எஞ்சிய தெலுங்கு மொழி பேசும் பகுதி, ஆந்திரா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு ஐக்கிய ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்கப்பட்டது.

ஆந்திரப் பிரதேசம் (1956–2014)
ஆந்திரப் பிரதேசம் (2014–தற்போது)

ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 மூலம் 2 சூன் 2014 அன்று ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா மாநிலங்களாக ஐக்கிய ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்டது.

# பெயர் உருவப்படம் பதவி ஆரம்பம் பதவி முடிவு கால அளவு நியமித்தவர்
1 சந்துலால் மாதவ்லால் திரிவேதி 1 நவம்பர் 1956 1 ஆகத்து 1957 0 ஆண்டுகள், 273 நாட்கள் இராசேந்திர பிரசாத்
2 பீம் சென் சச்சார் 1 ஆகத்து 1957 8 செப்டெம்பர் 1962 5 ஆண்டுகள், 38 நாட்கள்
3 சத்யவந்த் மல்லன்னா சிறீநாகேசு 8 செப்டெம்பர் 1962 4 மே 1964 1 ஆண்டு, 239 நாட்கள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
4 பட்டம் தாணு பிள்ளை 4 மே 1964 11 ஏப்பிரல் 1968 3 ஆண்டுகள், 343 நாட்கள்
5 கந்துபாய் கசன்ஜி தேசாய்  – 11 ஏப்பிரல் 1968 25 சனவரி 1975 6 ஆண்டுகள், 289 நாட்கள் சாகீர் உசேன்
6 எசு. ஒபுல் ரெட்டி  – 25 சனவரி 1975 10 சனவரி 1976 0 ஆண்டுகள், 350 நாட்கள் பக்ருதின் அலி அகமது
7 மோகன் லால் சுகாதியா 10 சனவரி 1976 16 சூன் 1976 0 ஆண்டுகள், 158 நாட்கள்
8 இராமச்சந்திர தோண்டிபா பண்டாரே 16 சூன் 1976 17 பெப்பிரவரி 1977 0 ஆண்டுகள், 246 நாட்கள்
9 பிபின்சந்திரா சீவன்லால் திவான்  – 17 பெப்பிரவரி 1977 5 மே 1977 0 ஆண்டுகள், 77 நாட்கள் ப. த. ஜாட்டி
10 சாரதா முகர்ஜி  – 5 மே 1977 15 ஆகத்து 1978 1 ஆண்டு, 102 நாட்கள்
11 கொ. சா. ஆபிரகாம்  – 15 ஆகத்து 1978 15 ஆகத்து 1983 5 ஆண்டுகள், 0 நாட்கள் நீலம் சஞ்சீவ ரெட்டி
12 தாக்கூர் ராம் லால் 15 ஆகத்து 1983 29 ஆகத்து 1984 1 ஆண்டு, 14 நாட்கள் ஜெயில் சிங்
13 சங்கர் தயாள் சர்மா 29 ஆகத்து 1984 26 நவம்பர் 1985 1 ஆண்டு, 89 நாட்கள்
14 குமுத்பென் மணிசங்கர் ஜோஷி 26 நவம்பர் 1985 7 பெப்பிரவரி 1990 4 ஆண்டுகள், 73 நாட்கள்
15 கிருஷண் காந்த் 7 பெப்பிரவரி 1990 22 ஆகத்து 1997 7 ஆண்டுகள், 196 நாட்கள் இரா. வெங்கட்ராமன்
16 கோபால ராமானுஜம்  – 22 ஆகத்து 1997 24 நவம்பர் 1997 0 ஆண்டுகள், 94 நாட்கள் கொ. இரா. நாராயணன்
17 சக்ரவர்த்தி ரங்கராஜன் 24 நவம்பர் 1997 3 சனவரி 2003 5 ஆண்டுகள், 40 நாட்கள்
18 சுர்சித் சிங் பர்னாலா 3 சனவரி 2003 4 நவம்பர் 2004 1 ஆண்டு, 306 நாட்கள் ஆ. ப. ஜை. அப்துல் கலாம்
19 சுசில்குமார் சிண்டே 4 நவம்பர் 2004 29 சனவரி 2006 1 ஆண்டு, 86 நாட்கள்
20 இராமேசுவர் தாக்கூர் 29 சனவரி 2006 22 ஆகத்து 2007 1 ஆண்டு, 205 நாட்கள்
21 நா. த. திவாரி 22 ஆகத்து 2007 27 திசம்பர் 2009 2 ஆண்டுகள், 127 நாட்கள் பிரதிபா பாட்டில்
செயல் ஈ. சீ. இல. நரசிம்மன் 28 திசம்பர் 2009 22 சனவரி 2010 9 ஆண்டுகள், 207 நாட்கள்
22 23 சனவரி 2010 1 சூன் 2014
2 சூன் 2014[note 1][i] 23 சூலை 2019 பிரணப் முகர்ஜி
23 பிசுவபூசண் அரிச்சந்தன் 24 சூலை 2019 23 பெப்ரவரி 2023 3 ஆண்டுகள், 214 நாட்கள் இராம் நாத்து கோவிந்து
24 எசு. அப்துல் நசீர் 24 பெப்ரவரி 2023 தற்பொழுது கடமையாற்றுபவர் 1 ஆண்டு, 323 நாட்கள் திரௌபதி முர்மு

குறிப்புகள்

  1. தெலங்காணா ஆளுநராகவும் பணியாற்றினார்
  1. 58 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 மூலம் 2 சூன் 2014 அன்று ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "List of Governors". AP State Portal. Government of Andhra Pradesh. Archived from the original on 27 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 August 2018. {cite web}: Check date values in: |archive-date= (help)

வெளிப்புற இணைப்புகள்