உருத்திர விக்கிரமன்
உருத்திர விக்கிரமன் Rudravarman Sri Maharaja Rudra Wikrama | |||||
---|---|---|---|---|---|
சிறீவிஜய அரசர் | |||||
ஆட்சிக்காலம் | 728 - 746 | ||||
முன்னையவர் | இந்திரவருமன் | ||||
பின்னையவர் | ராக்காய் பனங்கரன் (Dyah Pancapana) | ||||
|
|
உருத்திர விக்கிரமன் அல்லது மகாராஜா உருத்திர விக்கிரமன் (ஆங்கிலம்: Rudra Vikrama அல்லது Rudravarman இந்தோனேசியம்: Rudra Wikrama; சீனம்: Liu-t'eng-wei-kung) என்பவர் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிறீ விஜயப் பேரரசின் மன்னர் ஆவார்.
சிறீவிஜய மகா அரசர் (Maharaja Sriwijaya) அல்லது கெடத்துவான் சிறீ விஜயா (மகாராஜா மரபு) (Kadatuan Srivijaya) எனும் அரச மரபைச் சார்ந்த இவரின் ஆட்சிக்காலம் கிபி 728 - 746 என பதிவாகி உள்ளது.[1]
வரலாறு
சீனாவின் தாங் அரசமரபு மன்னர்களின் அரசவைக்கு இவர், இரண்டு தூதர்களை அனுப்பினார் என சான்றுகள் உள்ளன.[2] முதலில் கி.பி 728-இல், இரண்டாவதாக கி.பி 742-இல்; இந்திரவருமன் தம் தூதர்களை அனுப்பி உள்ளார். தாங் அரசமரபு வரலாற்றுக் காலவரிசை நூலான தாங் புதிய நூல் (New Book of Tang) (சீனம்: Xīn Tángshū) எனும் நூலில் உருத்திர விக்கிரமனின் பெயர் லியூ-டெங்-வெய்-குங் (Liu-t'eng-wei-kung) என பதிவாகி உள்ளது.[1][2]
தாங் அரசமரபு வரலாற்றுக் காலவரிசை நூல் பதிவுகளில், இந்திரவருமனின் அரச பட்டப்பெயர் ஹோ-மி-டோ (Ho-mi-to) என பதிவாகி உள்ளது. இது சமசுகிருத சொல்லான அமிர்தம் எனும் சொல்லின் சீன மொழிச் சொல்லாக இருக்கலாம்.[1]
கடலாதிக்கம்
இந்திரவருமனின் ஆட்சிக் காலத்தில், சிறீவிஜயம் தனது வணிக மேலாதிக்கத்தை உறுதி செய்ய பற்பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அறியப்படுகிறது.
மலாக்கா நீரிணை மற்றும்; சுண்டா நீரிணை ஆகிய இரு கடல் பகுதிகளைச் சுற்றியுள்ள தென்கிழக்கு கடல் வழிகளில், சிறீவிஜயம் அதன் வடக்கு விரிவாக்கத்தைப் பெரிதாக்கியது எனவும் அறியப்படுகிறது.[2]
கலாசான் கல்வெட்டு
உருத்திர விக்கிரமன் ஆட்சிக் காலத்தில், அவர் ஜாவாவைச் சேர்ந்த ராக்காய் பனங்கரன் (Rakai Panangkaran) அல்லது (Dyah Pancapana) என்பவரால் கைப்பற்றப்பட்டதாக நம்பப்படுகிறது, ராக்காய் பனங்கரன் என்பவர் கலாசான் கல்வெட்டில் (Kalasan inscription) சைலேந்திர வம்சத்தின் (மாதரம் இராச்சியம்) இரத்தினம் என்று அழைக்கப்படுகிறார்.
அதன் பிறகு, சிறீ விஜய அரசு என்பது மாதரம் இராச்சியத்தின் அடிமை அரசானது. சிறீ விஜய அரசு மத்திய ஜாவாவில் உள்ள கேது சமவெளியில் (Kedu Plain) இருந்து ஆட்சி செய்யப்பட்டது.
நாளந்தா கல்வெட்டு
இதற்கிடையில், ஜாவா மன்னரின் பேரன் (மாதரம் இராச்சியம்) என்று அழைக்க்கப்பட்ட பாலபுத்ரதேவா (Balaputradewa) என்பவரை இந்தியா, நாளந்தா, பாலப் பேரரசு விடுவித்தாக நாளந்தா கல்வெட்டு (Nalanda inscription of Devapaladeva) கூறுகிறது. அதன் பிறகு சிறீவிஜயம் மீண்டும் ஒரு சுதந்திர நாடாக மாறியதாகவும் நாளந்தா கல்வெட்டு கூறுகிறது.[3]:108
சிறீ விஜய அரசை ராக்காய் பனங்கரன் கைப்பற்றிய பிறகு ஜெயநேசன் தோற்றுவித்த சிறீ விஜய அரச மரபிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. உருத்திர விக்கிரமனுக்குப் பின்னர் சிறீ விஜயத்தை, மாதரம் இராச்சியத்தின் அரசர்கள் ஆட்சி செய்யத் தொடங்கினர்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Tōyō Bunko, (Japan) (1972). Memoirs of the Research Department (in ஆங்கிலம்). p. 5.
- ↑ 2.0 2.1 2.2 Coedes, George (1968). The Indianized States of South-East Asia (in ஆங்கிலம்). University of Hawaii Press. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824803681.
- ↑ Cœdès, George (1996). The Indianized States of Southeast Asia. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8248-0368-X.
மேலும் காண்க
- ஜெயநேசன்
- சிறீவிஜயம்
- நாளந்தா கல்வெட்டு
- பாலப் பேரரசு
- மாதரம் இராச்சியம்
- சைலேந்திர வம்சம்