ராக்காய் காருங்

ராக்காய் காருங்
Rakai Garung
Srī Mahārāja Rakai Garung
Rakai Garung Dang Karayan Patapan Pu
சிறீவிஜயம்மாதரம் இராச்சியம்
6-ஆவது அரசர்
ஆட்சிக்காலம்829 - 847
முன்னையவர்தயா குலா
(Dyah Gula)
பின்னையவர்ராக்காய் பிக்கத்தான்
பிறப்புMedang Jawa Dwipa
மரபுசஞ்சய மரபு
தந்தைபனராபன்
மதம்பௌத்தம்
சிறீவிஜய அரசர்கள்
தொடக்கம்
பலெம்பாங்
ஜெயநேசன் 671–702
இந்திரவருமன் 702–728
உருத்திர விக்கிரமன் 728–742
(தகவல் இல்லை) 742–775
பிற்காலம்
சைலேந்திர மரபு
(மாதரம் இராச்சியம்)
பனங்கரன் 746–784
பனராபன் 784–803
ஜாவா
பானு 752–775
தருமசேது (விஷ்ணு) 775–?
தரணிந்திரன் 775–782
சமரகரவீரன் 800–819
ராக்காய் வாராக் 803–827
தயா குலா 827–829
ராக்காய் காருங் 829–847
பிரமோதவர்தனி 847–856
ராக்காய் பிக்கத்தான் 838–850
லோகபாலா 855–885
தகவாசன் 885–885
பனுவங்க தேவேந்திரன் 885–887
தயா பத்திரன் 887–887
உதயாத்தியன் 960–980
இசியா சி 980–988
சூடாமணி வருமதேவன் 988–1008
விஜயோத்துங்கவருமன் 1008–1017
கடாரம்
சங்கராமன் 1017–1030
செரி தேவன் 1028–(?)
சோழர் ஆட்சி
இராசேந்திர சோழன் 1025–1044
குலோத்துங்கன் 1070–1120
மௌலி மரபு
திரிலோகிய ராஜா 1183–(?)

ராக்காய் காருங் அல்லது சிறீ மகாராஜா ராக்காய் காருங் (ஆங்கிலம்: Rakai Garung; இந்தோனேசியம்: Srī Mahārāja Rakai Garung; ஜாவானியம்: Rakai Garung Dang Karayan Patapan Pu Palar) என்பவர் மத்திய ஜாவாவில், மாதரம் இராச்சியத்தின் சஞ்சய மரபைச் சார்ந்த அரசர் ஆவார்.[1] இவரின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 829 – 847.

8-ஆம் 9-ஆம் நூற்றாண்டுகளில், மாதரம் இராச்சியத்தின் அரசர்கள் சிறீவிஜயத்தையும் ஒரே சமயத்தில் ஆட்சி செய்தார்கள்.[1] மாதரம் இராச்சியத்தின் அரசராக இருந்தவர் சிறீவிஜயத்தின் அரசராகவும் இருந்தார்.

ராக்காய் காருங்கின் பெயர் பெங்கிங் கல்வெட்டு (Prasasti Pengging), மந்தியாசி கல்வெட்டு, வானுவா தெங்கா III கல்வெட்டு ஆகியவற்றில் அறியப்படுகிறது. மேலும் வங்சாகீர்த்தா கையெழுத்துச் சுவடியின் மூலமாக (Naskah Wangsakerta) அவரின் பெயர் மேலும் வலுப்படுத்தப்படுகிறது.[2]

வரலாறு

மந்தியாசி கல்வெட்டில், அவரது பட்டம் சிறீ மகாராஜா ராக்காய் காருங் என பொறிக்கப்பட்டு உள்ளது.[3] வானுவா தெங்கா III கல்வெட்டில் (908), அவர் பிப்ரவரி 14, 829 முதல் மார்ச் 6, 847 வரையில் ஆட்சி செய்தார் என்றும்; அவர் தியா குலாவுக்குப் பிறகும், ராக்காய் பிக்கத்தானுக்கு முன்பும், மன்னராக இருந்தார் என்றும் பொறிக்கப்பட்டு உள்ளது.[2]

ராக்காய் காருங் வெளியிட்ட மிகப் பழைமையான கல்வெட்டு பெங்கிங் கல்வெட்டு (819) ஆகும்.[2] இந்தக் கல்வெட்டில், அவரது பெயர் ராகார்யான் ஐ கருங் (Rakaryan i Garung) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கட்டத்தில் அவருக்கு இன்னும் சிறீ மகாராஜா என்ற பட்டம் வழங்கப்படவிலை.[2]

அவர் அரியணை ஏறுவதற்கு முன்பு ஓர் உயர் அரச அதிகாரியாக இருந்திருக்கலாம்; அல்லது முந்தைய மன்னர்களில் ஒருவரின் மகனாகவோ அல்லது சகோதரராகவோ இருந்திருக்கலாம்.[4]

வானுவா தெங்கா III கல்வெட்டு

வானுவா தெங்கா III கல்வெட்டின் படி, சாங் லுமா இ துக் (Sang lumah i Tuk) என்பவரின் மகனாக ராக்காய் காருங் இருந்து இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.

அதாவது பிரபு அல்லது அரச மரபைச் சேர்ந்த சாங் லுமா; துக் எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு துக் எனும் பட்டப் பெயர் கிடைத்துள்ளது. ராக்காய் காருங் அரசர் பதவியை ஏற்ற பிறகு, முந்தைய மன்னரால் விதிக்கப்பட்ட நில வரிகளை நீக்கியதாகவும் வானுவா தெங்கா III கல்வெட்டு கூறுகிறது.[5]

சர்ச்சைகள்

வரலாற்று ஆசிரியர் செலாமெட் முல்ஜானா (Slamet Muljana) என்பவர், ராக்காய் காருங் என்பவரும் சமரதுங்கன் என்பவரும் ஒரே நபராக இருக்கலாம் என கருத்து கூறுகிறார்.[5][6]

அதே வேளையில் ராக்காய் காருங் என்பவர் பிரமோதவர்தனியின் மருமகனாக இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர் டி காஸ்பாரிஸ் (Johannes Gijsbertus de Casparis) கூறுகிறார்.[6][2] ராக்காய் காருங் தொடர்பான வரலாற்றுச் சர்ச்சைகள் இன்றும் தொடர்கின்றன.[4]

மேலும் காண்க

மாதரம் இராச்சியத்தின் மன்னர்கள்

முன்னர் மாதரம் இராச்சியத்தின் மகாராஜா
ராக்காய் காருங்
829—847
பின்னர்

மேற்கோள்கள்

சான்றுகள்

  • Dwiyanto, Djoko. 1986. Pengamatan terhadap Data Kesejarahan dari Prasasti Wanua Tengah III tahun 908 Masehi. Dalam PIA IV (IIa). Jakarta: Pulit Arkenas, h. 92-110.
  • Boechari (2013-07-08). Melacak Sejarah Kuno Indonesia lewat Prasasti. Kepustakaan Populer Gramedia. ISBN 978-979-91-0520-2.
  • Mustopo, M. Habib (2005). Sejarah: Untuk kelas 2 SMA. Yudhistira. ISBN 978-979-676-707-6.
  • Arif, H. A. Kholiq (2010-01-01). MATA AIR PERADABAN ; Dua Milenium Wonosobo. Lkis Pelangi Aksara. ISBN 978-979-25-5331-4.
  • Soekmono, R. (1995). The Javanese Candi: Function and Meaning (dalam bahasa Inggris). BRILL. ISBN 978-90-04-10215-6.
  • Iongh, R. C. de (1977). Handbook of Oriental Studies (dalam bahasa Inggris). BRILL. ISBN 978-90-04-04918-5.

வெளி இணைப்புகள்

  • Ayatrohaedi. 2005. SUNDAKALA Cuplikan Sejarah Sunda Berdasarkan Naskah-naskah "Panitia Wangsakerta" Cirebon. Bandung: Pustaka Jaya