மிசோரம் அமைதி ஒப்பந்தம் 1986
மிசோரம் அமைதி ஒப்பந்தம், 1986 | |
---|---|
ஒப்பந்த வகை | அமைதி ஒப்பந்தம் |
கையெழுத்திட்டது | சூன் 30, 1986 |
இடம் | புது தில்லி, இந்தியா |
மூலமுதலான கையெழுத்திட்டோர் |
|
தரப்புகள் | |
மொழி | ஆங்கிலம் |
[1] |
மிசோரம் அமைதி ஒப்பந்தம், 1986 என்பது வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருந்த மிசோரம் பகுதியில், 1966ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிசோரமில் கிளர்ச்சி மற்றும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்திய அரசுக்கும் மிசோ தேசிய முன்னணிக்கும் இடையேயான அதிகாரப்பூர்வ ஒப்பந்தமாகும்.[1] மிசோ தேசிய முன்னணி என்பது இந்தியாவில் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக லால்தெங்கா தலைமையிலான மிசோ பிரிவினைவாதிகளின் அமைப்பாகும். 1950களின் பிற்பகுதியில் மிசோரமில் மௌடம் விளைவால் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தின் போது, மக்களுக்கு அரசின் ஆதரவு இல்லாததால் இந்த இயக்கம் உருவானது. அடுத்த தசாப்தங்களில் அரசியல் கிளர்ச்சி மற்றும் சமூக அமைதியின்மை ஏற்பட்டது. பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மிசோரம் ஒப்பந்தம், 1986: தீர்வுக்கான ஒப்பந்தம் இறுதியாக 30 சூன் 1986 அன்று கையெழுத்தானது. இந்த அமைதி ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில் ஆர். டி. பிரதான் மற்றும் இந்திய அரசின் உள்துறைச் செயலர் மற்றும் அரசாங்கத்தின் தலைமைச் செயலர் லால்காமா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. மிசோ தேசிய முன்னணி சார்பிர்ல் அதன் தலைவர் லால்தெங்கா கையொப்பம் இட்டார்.[2] 1947ல் பிரித்தானிய இந்தியாவிலிருந்து விடுதலைப் பெற்ற பிறகு, இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான ஒரே சமாதான ஒப்பந்தமாக இது குறிப்பிடப்படுகிறது.[3][4]
பின்னணி
மிசோ மக்கள் 1870ம் ஆண்டு முதல் பிரித்தானிய இந்தியாவில் இணைக்கப்பட்டனர். ஆகஸ்டு 1947ல், இந்திய விடுதலைக்குப் பிறகு அசாம் மாகாணத்தில் ஒரு மாவட்டமாக மிசோரம் இருந்தது. 1952ம் ஆண்டில் மிசோரமை உள்ள்டக்கிய லுசாய் மலை மாவட்டம் எனும் ஒரு துணை அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இது அடிப்படையில் பிற்கால மிசோரத்தை உள்ளடக்கியது. 1959ம் ஆண்டு மௌடம் காரணமாக விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பஞ்சம் ஏற்பட்டபோது, அரசியல் சூழ்நிலை மோசமாகியது. உள்ளூர் நிவாரணப் பணிகளுக்காக 1960ல் மௌதம் முன்னணி என்ற சமூக அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு மிசோ மக்களுடையது என்று மிசோ மக்களை உற்சாகப்படுத்த, விரைவில் மிசோ தேசிய பஞ்ச முன்னணி என்று பெயர் மாற்றப்பட்டது. அடுத்த ஆண்டு பஞ்சம் தணிந்ததால், அமைப்பு மேலும் அரசியல் ரீதியாக மாறியது மற்றும் மிசோ தேசிய முன்னணி (MNF) ஆனது. நவம்பர் 1961ல், லால்தெங்கா தலைமையில் அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியாக மாறியது. அனைத்து மிசோ பழங்குடியினரையும் ஒரே அரசியல் ஆளுகைக்குள் உள்ளடக்கும் வகையில் அகண்ட மிசோரத்தை உருவாக்குவதற்கான போராட்டமே முக்கிய இலக்காக இருந்தது. இது இரண்டு தசாப்தங்களாக நீடித்த அரசியல் கிளர்ச்சி மற்றும் சமூக அமைதியின்மைக்கு வழிவகுத்தது.[5]
எழுச்சி மற்றும் கிளர்ச்சி
மிசோ தேசிய முன்னணி அதன் ஆயுதப் பிரிவான மிசோ தேசிய இராணுவத்தை உருவாக்கியது. இது 1 மார்ச் 1966 அன்று ஜெரிகோ நடவடிக்கையின் கீழ் இந்தியாவிலிருந்து விடுதலையை அறிவித்தது.[3] முக்கிய நகரங்களில் உடனடியாக கொரில்லா போர் வெடித்தது. முதல் பெரிய நடவடிக்கை தொலைபேசி பரிமாற்றம் மற்றும் அய்சாலில் உள்ள அரசாங்க கருவூலத்தை சூறையாடியது.[6] அரசு அலுவலகங்கள், அஞ்சல் நிலையங்கள் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அசாம் அரசாங்கம் லுஷாய் மலை மாவட்டத்தை "தொந்தரவு நிறைந்த பகுதி" என்று மறுநாள் அறிவித்தது. மேலும் இந்திய அரசு இந்தியப் பாதுகாப்பு விதியின் கீழ் ஒரு பயங்கரவாத அமைப்பாக மிசோ தேசிய முன்னணியை தடை செய்தது.[7] இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் அப்பகுதியில் குவிக்கப்பட்டது. மார்ச் 5 முதல், அய்சால் நகரம் குண்டுவெடிப்பால் தாக்கப்பட்டு வாழத்தகுதியற்றதாக மாறியது. 1967ல் மிசோரமில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அமைதிக்கான பேச்சுவார்த்தை
பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், உள்ளூர் சமூக அமைப்புகள் மற்றும் தேவாலயத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிறிஸ்தவமயமாக்கப்பட்ட சமூகமாக மிசோ மக்கள் தேவாலயத்தை மட்டுமே சமாதானம் செய்பவர்களாகக் கொண்டிருந்தனர். பிரஸ்பைடிரியன் மற்றும் பாப்டிஸ்ட் தேவாலயங்களின் அதிகாரிகள் கூட்டாக கிளர்ச்சியாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த அமைதிக் குழுவை உருவாக்கினர்.[8]
அமைதி ஒப்பந்தம்
இராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த போது மிசோரமில் அமைதி நிலவ வேண்டி 30 சூன் 1986 மிசோ தேசிய முன்னணி தலைவர் லால்தெங்காவுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார். இதன்படி அனைத்து மிசோ தேசிய முன்னணியினர் மீதான் குற்றவழக்குகள் ரத்து செய்யப்பட்டது. மிசோரம் அரசின் ஒப்புதல் இன்றி இந்திய அரசு இயற்றும் சட்டங்கள் மிசோரமுக்கு பொருந்தாது என வலியுறுத்தப்பட்டது. மிசோரமிற்கு மாநிலத் தகுதி வழங்கவும் மற்றும் ஒரு உயர் நீதிமன்றம் அமைக்கவும் ஒப்பந்தம் இடப்பட்டது. மேலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.[9]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Goswami, Namrata (2009). "The Indian Experience of Conflict Resolution in Mizoram". Strategic Analysis 33 (4): 579–589. doi:10.1080/09700160902907118.
- ↑ "Mizoram Accord, 1986" (PDF). United Nations Peacemaker. பார்க்கப்பட்ட நாள் 4 June 2020.
- ↑ Sharma, S.K. (2016). "Lessons from Mizoram Insurgency and Peace Accord 1986" (PDF). www.vifindia.org. Vivekananda International Foundation. பார்க்கப்பட்ட நாள் 24 December 2018.
- ↑ Bhattacherjee, S. (20 June 2011). "Accord most successful in the country, says Mizo CM 'Sundry factors ensured peace'". The Telegraph. https://www.telegraphindia.com/india/accord-most-successful-in-the-country-says-mizo-cm-sundry-factors-ensured-peace/cid/380006. பார்த்த நாள்: 24 December 2018.
- ↑ Aplin, K.; Lalsiamliana, J. (2010). "Chronicle and impact of the 2005-09 Mautam in Mizoram". In Singleton, G.; Belmain, S.; Brown, P.; Hardy, B. (eds.). Rodent outbreaks : ecology and impacts. Metro Manila, Philippines: International Rice Research Institute. pp. 22–23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-971-22-0257-5.
- ↑ Wangchuk, R.N. (2 July 2018). "Mizo Peace Accord: The Intriguing Story Behind India's Most Enduring Peace Initiative!". The Better India. பார்க்கப்பட்ட நாள் 26 November 2019.
- ↑ Nunthara, C. (1981). "Grouping of Villages in Mizoram: Its Social and Economic Impact". Economic and Political Weekly 16 (30): 1237, 1239–1240.
- ↑ William Sing, N. (26 August 2014). "The fall of kohhran swarkar in Mizoram". Himal Southasian. https://himalmag.com/fall-kohhran-swarkar-mizoram/. பார்த்த நாள்: 28 December 2018.
- ↑ Memo Sigh, L. (25 June 2014). "The Mizo Accord". Imphal Free Press. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 24 December 2018.
{cite web}
: Check date values in:|archive-date=
(help)