சசி கபூர்
சசி கபூர் Shashi Kapoor | |
---|---|
பிறப்பு | பல்பீர் பிருத்விராஜ் கபூர் 18 மார்ச்சு 1938 கொல்கத்தா, வங்காள மாகாணம், இந்தியா |
இறப்பு | 4 திசம்பர் 2017 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 79)
பணி | நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1941–1999 |
பெற்றோர் | பிருத்விராஜ் கபூர் ராம்சர்ணி கபூர் |
வாழ்க்கைத் துணை | ஜெனிபர் கென்டல் (1958–1984; இறப்பு வரை) |
பிள்ளைகள் | குணால் கபூர் கரன் கபூர் சஞ்சனா கபூர் |
விருதுகள் | பத்ம பூசண் (2011) தாதாசாகெப் பால்கே விருது (2015) |
சசி கபூர் (Shashi Kapoor, இந்தி: शशि कपूर), (18 மார்ச்சு 1938 - 4 திசம்பர் 2017) பல்பீர் பிரித்விராஜ் கபூர் ) புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். பாலிவுட்டில் கோலோச்சும் கபூர் குடும்பத்தில் திரைப்பட மற்றும் நாடக நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகனும் ராஜ் கபூர் மற்றும் சம்மி கபூருக்கு இளையவரும் ஆவார். இவர் பிரித்தானிய நடிகை ஜென்னிபர் கெண்டலைத் திருமணம் புரிந்தார். இவரது வாரிசுகள் கரண் கபூர், குணால் கபூர் மற்றும் சஞ்சனா கபூர் ஆகியோரும் கலைத்துறையில் நாட்டம் கொண்டு சாதனை படைத்துள்ளனர். அமிதாப் பச்சனுக்கு இணையாக இவர் நடித்த இந்தித் திரைப்படங்கள் தீவார், தோ அவுர் தோ பாஞ்ச், நமக் அலால் ஆகியன இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தன. தவிர பல பிரித்தானியப் படங்களிலும் "சேக்ஸ்பியர்வாலா" போன்ற மெர்ச்சென்ட் ஐவரி தயாரித்த ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.
படைப்புகள்
- Shashi Kapoor presents the Prithviwallahs, by Shashi Kapoor, Deepa Gahlot, Prithvi Theatre (Bombay, India). Roli Books, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8174363483.
மேலும் படிக்க
- The Kapoors: the first family of Indian cinema, by Madhu Jain. Penguin, Viking, 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0670058378.