தி. ஜே. எஸ். ஜார்ஜ்
தி. ஜே. எஸ். ஜார்ஜ் எனப்படும் தைல் ஜேக்கப் சோனி ஜார்ஜ் (பிறப்பு 7 மே 1928) இவர் ஓர் இந்திய எழுத்தாளரும் மற்றும் வாழ்க்கை வரலாற்றாசிரியருமாவார். இவர் இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் 2011 இல் பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளார்.[1] தி. ஜே. எஸ். ஜார்ஜ், இந்திய மாநிலமான கேரளாவில், நீதியரசர் தெய்ல் தாமஸ் ஜேக்கப் மற்றும் இல்லத்தரசியான சச்சியாமா ஜேக்கப் ஆகியோருக்கு எட்டு குழந்தைகளில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவரது முன்னோர்கள் கேரளாவின் தும்பமோனில் இருந்தாலும், இவர் தனது மனைவி அம்முவுடன் பெங்களூரு மற்றும் கோயம்புத்தூரில் வசிக்கிறார். இவருக்கு செபா தெயில் என்ற ஒரு மகளும், சீத் தாயில் என்ற ஒரு மகனும் உள்ளனர். அமெரிக்க தொலைக்காட்சிப் பத்திரிகையாளர் இராஜ் மத்தாய் இவரது மருமகன் ஆவார்.
தொழில் மற்றும் எழுத்து நடை
தி. ஜே.எஸ். ஜார்ஜ் ஒரு தொழில்முறை எழுத்தாளராவார். மேலும்,தீவிர அரசியல் கட்டுரையாளர் மற்றும் சுயசரிதை எழுத்தாளர் என சர்வதேச அளவில் தனித்துவத்தை அடைந்துள்ளார். இவர் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு இந்தியாவிலுள்ள, சென்னை கிரிஸ்துவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பின்னர், 1950ம் ஆண்டில், ஃப்ரீ பிரஸ் ஜர்னல் நிறுவனம் அமைந்துள்ள மும்பையில் தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். மேலும், இவர் சர்வதேச பத்திரிகை நிறுவனமான, தி சர்ச்லைட் மற்றும் தூர கிழக்கு பொருளாதார விமர்சனம் மூலம் ஆசியாவீக்கின் (ஹாங்காங்) நிறுவன ஆசிரியராக ஆனார்.[2]
தற்போது இவர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசின் ஆசிரியர் மற்றும் ஆலோசகராக உள்ளார்.[3] ஒரு மூத்த பத்திரிகையாளரும், இந்தியாவின் சிறந்த கட்டுரையாளர்களில் ஒருவருமான இவர், இந்தியன் எக்ஸ்பிரசில் தனது பத்திகள் மூலம் சமூக அநீதி, ஊழல் மற்றும் அரசியல் அராஜகங்களுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடர்கிறார்.[4]
ஒரு ஆசிரியர், கட்டுரையாளர், எழுத்தாளர் மற்றும் நித்திய சொற்களஞ்சியம் என்பதைத் தவிர, இவர் நீண்டகாலமாக சீனக் கண்காணிப்பாளராகவும் இருந்து வருகிறார். 10 வருட இடைவெளிக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் தயாரிப்புகளைக் காண மீண்டும் சீனாவுக்குச் சென்று நவீன சீனாவைப் பற்றி தொடர் கட்டுரைகளை எழுதினார்.[5]
எழுதிய புத்தகங்கள்
இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திரப் போராளியுமான கிருஷ்ண மேனன் பற்றிய சுயசரிதை இவரால் எழுதப் பட்டது. இந்தப் புத்தகம் மேனனின் ஆளுமை குறித்து ஒரு குறிப்பிடத்தக்க நுண்ணறிவை வழங்குகிறது. இப்புத்தகத்தில், இவர் ஒரு சிலரை உற்சாகப்படுத்திகிறார், பலரை கோபப்படுத்தினார் மற்றும் பலரையும் சங்கடப்படுத்தியிருந்தார். லீ குவான் யூவின் சிங்கப்பூர் என்பது ஒரு சர்ச்சைக்குரிய தலைவரின் கொள்கைகள் மற்றும் முன்னறிவிப்புகள் பற்றிய ஊடுருவக்கூடிய பகுப்பாய்வு ஆகும்.
தி லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் நர்கிசு, என்பது இந்தி திரைப்படத் துறையைத் தாண்டி ஒரு கலைஞரைப் பற்றிய ஒரு நேர்த்தியான மற்றும் தகவலறிந்த புத்தகம்மான இது தொழில்நுட்பம் அல்லது வணிகவாதத்தால் அறியப்படாத கலை திறமைகளின் பொற்காலத்திற்கு ஒரு சான்றாக உள்ளது. விசாரணை அகராதி: ஆலோசனைகள், சிக்கல்கள், கண்டுபிடிப்புகள் என்ற இந்த நூல் இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய சொற்களை உள்ளடக்கி எழுதப்பட்டது அவை பற்றி மேற்கத்திய அகராதிகளில் தெளிவாக இல்லை.
மேற்கோள்களின் விசாரணை அகராதி என்பது பண்டைய மற்றும் நவீன இந்திய சிந்தனையை பிரதிபலிக்கிறது. பத்திரிகையில் பாடங்கள் போதன் ஜோசப்பின் கதை என்ற புத்தகம் புகழ்பெற்ற ஆசிரியரும் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரின் வண்ணமயமான வாழ்க்கையை சித்தரிக்கிறது. மோசடிகளின் முதல் அடைக்கலம்: நவீன இந்தியாவில் அரசியல் என்பது தி. ஜே. எஸ் ஜார்ஜின் வாராந்திர கட்டுரையான "பாயிண்ட் ஆஃப் வியூ" என்றக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசின் 10 ஆண்டுகளாக வழக்கமான அம்சமாக இருந்தது. மைண்டானோவில் கிளர்ச்சி: பிலிப்பைன்ஸ் அரசியலில் இஸ்லாம் எழுச்சி பற்றிய புத்தகமாகும்.
இதைத்தவிர பீகாரில் கிளர்ச்சி: ஆகஸ்ட் 1965 எழுச்சியின் ஆய்வு, தருணங்கள் என்பது "சைட்லைட்ஸ்" போன்றவைகள் கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்தியாவில் உள்ள மாகாண பத்திரிகை என்பது இந்திய மொழி செய்தித்தாள்களின் வளர்ச்சியின் பல அம்சங்களைப் பற்றி விவாதிக்கிறது.
எடிட்டிங்: பத்திரிகையாளர்களுக்கான ஒரு கையேடு இதை புது தில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன்ஸ் என்ற வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டது. இது மின்னணு போட்டியின் அச்சுறுத்தலை முன்னறிவித்து அச்சு ஊடக ஆசிரியரின் புதிய பங்கை மறுவரையறை செய்கிறது. இந்தியா 1000 முதல் 2000 வரை: 1000 ஆண்டுகளின் கதை இது ஒரு மில்லினியம் பற்றிய குறிப்பு. 50 வயதில் இந்தியா: உண்மைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பகுப்பாய்வு என்பது 1997இல் சென்னை: எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டது.
செல்வி எ லைஃப் இன் மியூசிக், இதில் இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய இசைக்கலைஞர்களில் ஒருவரான எம்.எஸ். சுப்புலட்சுமி என்பவரின் கதையைச் சொல்கிறார்.[6][7] ஜெயா: ஒரு நம்பமுடியாத கதை என்பது முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை சுவாரஸ்யமான தலைப்புகள் மற்றும் சிறுகுறிப்புகளுடன் கூடிய புகைப்படங்களின் தொகுப்பாகும்.
விருதுகள்
இவரது இலக்கியப் பணிக்காக தேசிய விருதுகள் பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவையாக 2001இல் பாட்ரிகா அகாடமி விருது [8] 2005இல் முகமது கோயா பத்திரிகை விருது,[9] 2007இல் இராஜ்யோத்சவ விருது,[10] 2008இல் பசீர் புரஸ்காரம் விருது,[4] 2011இல் இந்திய அரசின் பத்ம பூஷண் விருது,[1] 2013இல் ஆழிக்கோடு விருது, 2017இல் கமலா சுராய்யா விருது,[11] மற்றும் 2017இல் கேசரி ஊடக விருது [12] போன்றவை அடங்கும்
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 Padma Awards Announced Press Information Bureau, Government of India, 2011
- ↑ Dr. K. Javeed Nayeem, "By George!"Star of Mysore, 2008
- ↑ Kannada Prabha, 2008 பரணிடப்பட்டது 2010-01-14 at the வந்தவழி இயந்திரம் part of The New Indian Express Group
- ↑ 4.0 4.1 "Basheer Puraskaram Award, 2008". Archived from the original on 2019-12-20. பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.
- ↑ First of a six-part series on China Churumuri Wordpress, 2008
- ↑ MS – A Life in Music பரணிடப்பட்டது 2012-03-07 at the வந்தவழி இயந்திரம் Indiaclub book review
- ↑ MS – A Life in Music பரணிடப்பட்டது 2008-05-01 at the வந்தவழி இயந்திரம் Muse India book review
- ↑ "Patrika Academy Award, 2001". Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.
- ↑ "Mohammed Koya Award, 2005". Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.
- ↑ "Rajyotsava Award, 2007". Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2019-12-23.
- ↑ Kamala Surayya Award, 2017
- ↑ Kesari Media Award, 2017