ஜஸ்பால் பட்டி

ஜஸ்பால் சிங் பட்டி
பிறப்பு(1955-03-03)3 மார்ச்சு 1955
அம்ரித்சர்
இறப்பு25 அக்டோபர் 2012(2012-10-25) (அகவை 57)
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1990–2012
சமயம்சீக்கியம்
வாழ்க்கைத்
துணை
சவீதா பட்டி (1985–2012)

ஜஸ்பால் சிங் பட்டி (Jaspal Singh Bhatti, இந்தி: जसपाल भट्टी 3 மார்ச்சு, 1955 – 25 அக்டோபர், 2012) பொதுமக்களின் சிக்கல்களை தமது அங்கத நாடகங்கள் மூலம் வெளிப்படுத்திய புகழ்பெற்ற ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஆளுமை ஆவார். இந்தி மொழியிலும் பஞ்சாபி மொழியிலும் அமைந்த அவரது தொலைக்காட்சித் தொடர்கள் பிளாப் ஷோ, உல்ட்டா புல்ட்டா ஆகியன 1980களிலும் 1990களிலும் இந்திய தேசியத் தொலைக்காட்சியான தூர்தர்சனில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அவரது கடைசி திரைப்படமாக அமைந்த மின்வெட்டைக் கேலி செய்யும் பவர்கட் என்ற திரைப்பட விளம்பரத்திற்காக பயணிக்கையில் சாலை விபத்தில் அக்டோபர் 25, 2012 அன்று உயிரிழந்தார்.[1]

துவக்க காலம்

ஜஸ்பால் பட்டி மார்ச்சு 3, 1955இல் அம்ரிதசரசில் ஓர் இராசபுத்திர சீக்கிய குடும்பத்தில் பிறந்தார். பஞ்சாபின் தலைநகர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் மின்னியல் பொறியாளராகப் பட்டம் பெற்றார். தனது கல்லூரி நாட்களிலேயே அவர் நடத்திய தெருவோர நாடகங்களான நான்சென்சு கிளப் போன்றவை புகழ் பெற்றிருந்தன. இவை பெரும்பாலும் சமூகத்தில் நிலவிய ஊழலைக் கேலி செய்து அங்கத நடையில் அமைந்திருந்தன. சண்டிகரிலிருந்து வெளியான த டிரிப்யூன் என்ற செய்தித்தாளுக்குப் பகடிப்பட ஓவியராக பணி புரிந்து வந்தார். பின்னர் தொலைக்காட்சித் தொடர்கள் பிளாப் ஷோ மற்றும் உல்ட்டா புல்ட்டா மூலம் நாடெங்கும் அறியப்பட்டார்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்