பி. எம். எக்டே

பெல்லே மோனப்ப எக்டே
B. M. Hegde
2005இல் எக்டே
பிறப்புஆகத்து 18, 1938
தெற்கு கனரா,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா
(தற்போது கருநாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில்)
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்மருத்துவ அறிவியலாளர்,கல்வியாளர் மற்றும் எழுத்தாளர்
நிறுவனங்கள்மணிப்பால் பல்கலைக்கழகம்
பாரதிய வித்தியா பவன்
குறிப்பிடத்தக்க விருதுகள்மரு. பி. சி. ராய் விருது (1999)
பத்ம பூசண் (2010)
நல்லாரி கிரண் குமார் ரெட்டி பி.எம் எக்டேவிற்கு கௌரவப் பட்டம் வழங்குதல்

பி.எம். எக்டே (B. M. Hegde) என்பவர் மருத்துவராகவும் ஆசிரியராகவும் நூலாசிரியராகாவும் விளங்குபவர்.மருத்துவத் துறையில் புதிய சிந்தனைகளைக் கொண்டவர்.மணிப்பால் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்து ஒய்வு பெற்றவர்.தேசிய அளவிலும் உலக அளவிலும் பல விருதுகளைப் பெற்றவர். சனவரி 2021இல் இவருக்கு இந்தியாவின் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் அறிவிக்கப்பட்டு நவம்பர் மாதம் விருது வழங்கப்பட்டது.[1]

பிறப்பும் கல்வியும்

கருநாடக மாநிலம் உடுப்பிக்கு அருகில் உள்ள பங்காள என்னும் ஊரில் பிறந்தார். எம் பி பி எஸ் படிப்பை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஸ்டாலின் மருத்துவக்கல்லூரியில் பயின்றார்.எம்.டி படிப்பை லக்னவ் பல்கலைக் கழகத்திலும் எப் ஆர் சி பி கல்வியை லண்டன் பல்கலைக் கழகத்திலும் படித்தார். நெஞ்சாங்குலை நோய் நிபுணர் ஆவதற்காக ஆர்வர்டு மருத்துவப் பள்ளியில் பயிற்சிப் பெற்றார். மேலும் பல மேனாட்டுப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் பட்டங்கள் பெற்றார்.

பணி

மருத்துவர் எக்டே ஆசிரியர்த் தொழிலை மிகவும் விரும்புபவர். பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் வருகைப் பேராசிரியராக உள்ளார். அப்பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்பிலும் ஆராய்ச்சிப் பட்டம் பெறுவதிலும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவி செய்கிறார்.மருத்துவம் தொடர்பாக பல நூல்களை ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் எழுதியுள்ளார். மருத்துவர் எக்டே நோயாளிகளிடம் அணுகும் போது நோயாளிகளின் கவலையையும் அச்சத்தையும் அகற்றும் வகையில் அவர்களுடன் பேசுவார். நோயின் மூலக் காரணங்களைக் கண்டறிய இக்காலத்தில் பயன்படுத்தப் படும் உயர் தொழில்நுட்ப முறைகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி வருகிறார். மருத்துவர்கள் அளவுக்கு மிகையாக மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுப்பதைக் கண்டிக்கிறார். ஆண்டிபயாட்டிக் மருந்துகள் எதிர் விளைவை உண்டாக்கும் என்பதையும் கூறி வருகிறார். மருந்துகளை உட்கொண்டு நோய்களை விரட்டுவதை விட உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்த்துக் கொள்வதே சாலச் சிறந்தது என்றும் மாசடைந்த சுற்றுச் சூழல் தூய்மையில்லாத காற்று கலப்பட உணவு, கெட்ட தண்ணீர் ஆகியன இற்றைக் கால கேடுகள் என்றும் இவற்றினால் மனித உடலின் நோய்த் தடுப்பு வலிமை குறைகிறது என்றும் கடின உழைப்பும் சத்துணவும் நடைப் பயிற்சியும் மிகத் தேவையானவை என்றும் இப்போதைய மருத்துவக் கல்வி முறையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

விருதுகள்

எழுதிய நூல்கள்

உசாத்துணைகள்

http://www.mangalorean.com/browsearticles.php?arttype=mom&momid=50 பரணிடப்பட்டது 2016-01-16 at the வந்தவழி இயந்திரம்

http://thamizhoviya.blogspot.in/2014/07/blog-post_7796.html

http://www.thehindubusinessline.com/todays-paper/tp-agri-biz-and-commodity/article1668639.ece

புற இணைப்புகள்

சான்றுகள்

  1. "பத்ம விருதுகள்". தி இந்து. சனவரி 21, 2021. பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி,2021. {cite web}: Check date values in: |access-date= (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)