சிவதாணு பிள்ளை

சிவதாணு பிள்ளை (பிறப்பு:15 ஜூலை 1947) தமிழ் நாட்டின் நாகர்கோவிலில் பிறந்த ஒரு விஞ்ஞானி ஆவார். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் பணிபுரியும் இவர் ரஷ்ய-இந்திய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவரது தந்தை ஆபத்து காத்தான் ஒரு ஆயுர்வேத மருத்துர். டி.வி.டி. பள்ளியில் பள்ளிப்படிப்பும், 1969 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பும் (BE - Electrical Engineering) முடித்தார். 1991 ஆம் ஆண்டில் ஹார்வர்டு வணிகப் பள்ளியில் மேற்படிப்பு (Advanced Management Program) படித்தார்.

வழக்கைச் சுருக்கம்

பொறியியல் படிப்பு படிக்கும் காலத்தில் சி.வி. ராமன், விக்ரம் சாராபாய் போன்றோரால் பாராட்டப் பெற்றவர். பின்னாளில் அப்துல் கலாமுடன் இஸ்ரோவில் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர்.

பிரமோஸ் ஏவுகணை

இந்திய ரஷ்ய கூட்டு முயற்சியால் உருவான பிரமோஸ் ஏவுகணை திட்டத்தில் பங்களித்துள்ளர். பிரமோஸ் ஏவுகணை ஒலியை விட ஐந்து மடங்கு வேகமாக செல்லக்கூடியது.