பதிமூன்றாம் தாலமி

பதிமூன்றாம் தாலமி
தாலமி பேரரசர்
பதிமூன்றாம் தாலமியின் சித்திரம், ஆண்டு 1736
கிரேக்க தாலமி வம்சத்து எகிப்திய பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 51–47
முன்னையவர்பனிரெண்டாம் தாலமி
பின்னையவர்ஏழாம் கிளியோபாற்றா மற்றும் பதிநான்காம் தாலமி
உடனாட்சியர்ஏழாம் கிளியோபாற்றா மற்றும் நான்காம் அர்சினோ (சகோதரி)
பிறப்புகிமு 62/61
இறப்புஏறத்தாழ கிமு 13 சனவரி 47
நைல் நதி
துணைவர்ஏழாம் கிளியோபாற்றா, நான்காம் அர்சினோ (சகோதரிகள்)
பண்டைய கிரேக்கம்Πτολεμαίος ΙΓ΄ Θεός Φιλοπάτωρ
அரசமரபுதாலமி வம்சம்
தந்தைபனிரெண்டாம் தாலமி

பதிமூன்றாம் தாலமி (Ptolemy XIII Theos Philopator)[1]பண்டைய எகிப்தை கிமு 305 முதல் கிமு 30 முடிய ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தின் எகிப்திய பார்வோன் ஆவார். இவர் பனிரெண்டாம் தாலமியின் மகன் ஆவார். இவர் பண்டைய எகிப்தின் தாலமி பேரரசை தனது சகோதரிகளும், மனைவிகளுமான ஏழாம் கிளியோபாற்றா[2] மற்றும் நான்காம் அர்சினோவுடன் கிமு 51 முதல் கிமு 47 முடிய 5 ஆண்டுகள் ஆட்சி செய்தார். எகிப்தில் நிலவிய உள்நாட்டுப் போரினால் ஏழாம் கிளியோபாற்றா, எகிப்தை விட்டு வெளியேறிதால், பதிமூன்றாம் தாலமி தனது மற்றொரு சகோதரியும், மனைவியுமான நான்காம் அர்சினோவுடன் எகிப்தை ஆண்டார்.

எலனியக் காலத்து பனிரெண்டாம் தாலமியின் சிற்பம்
பதிமூன்றாம் தாலமியின் சகோதரி & மனைவியுமான ஏழாம் கிளியோபாற்றாவின் சிற்பம்

உள்நாட்டுப் போர்

எகிப்தில் நடந்த உள்நாட்டுப் போரில் சிரியாவில் அடைக்கலம் அடைந்த ஏழாம் கிளியோபாட்ராவின் காதலில் யூலியசு சீசர் மயங்கினார்.[3] அதனால் பதிமூன்றாம் தாலமி தனது சகோதரி நான்காம் அர்சினோவை திருமணம் செய்து கொன்டு எகிப்தை ஆண்டார்.

ஏழாம் கிளியோபாட்ரா ஜூலியஸ் சீசரின் ரோமானியப் படைகளுடன் நைல் நதி போரில் (கிமு 47) பதிமூன்றாம் தாலமியை வீழ்த்தினார். பதிமூன்றாம் தாலமி போரில் தோற்று நைல் நதியை கடக்க முயன்ற போது 13 சனவரி கிமு 47 அன்று நீரில் மூழ்கி இறந்தார். பின்னர் ஏழாம் கிளியோபாட்ரா தனது தம்பியான பதிநான்காம் தாலமியை (ஆட்சிக் காலம்) கிமு 47-44) மணந்து எகிப்தின் இணை ஆட்சியர் ஆனார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பதிமூன்றாம் தாலமி
பிறப்பு: கிமு 62 இறப்பு: கிமு 47
அரச பட்டங்கள்
முன்னர்
பனிரெண்டாம் தாலமி மற்றும் ஏழாம் கிளியோபாற்றா
எகிப்தியப் பார்வோன்
கிமு 51– 47
with ஏழாம் கிளியோபாற்றா
பின்னர்
ஏழாம் கிளியோபாற்றா மற்றும் பதிநான்காம் தாலமி