கோவா மாநிலங்களவை உறுப்பினர்கள்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் கோவா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஒருவர். இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்

தற்போது கோவாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினராக இருப்பவர், அவர் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

பெயர் கட்சி பதவிக் காலம்
ஜான் எப். பெர்ணாண்டசு இதேகா 08-07-1987 முதல் 07-07-1999 வரை
எட்வர்டோ ஃபலேரோ இதேகா 29-07-1999 முதல் 28-07-2005 வரை
சாந்தராம் லக்ஷ்மண் நாயக் இதேகா 29-07-2005 முதல் 28-07-2017 வரை
வினய் தினு தெண்டுல்கர் பா.ஜ.க 29-07-2017 முதல் 28-07-2023 வரை
  • மூலம்:[1]
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.

இதையும் பார்க்க

மேற்கோள்களின் முன்தோற்றம்

  1. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat, Sansad Bhawan, New Delhi.