தில்லி மாநிலங்களவை உறுப்பினர்கள்

இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் தில்லி மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 3 பேர். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.

உறுப்பினர்கள் பட்டியல்

தற்போது தில்லியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.

வ.எண். உறுப்பினர் பெயர் அரசியல் கட்சி பதவிக்காலம்
1 ஜனார்த்தன் திவிவேதி இந்திய தேசிய காங்கிரஸ் 28-01-2006 முதல் 27-01-2012 வரை
2 பர்வேஸ் ஹாஸ்மி இந்திய தேசிய காங்கிரஸ் 04-08-2009 முதல் 27-01-2012 வரை
3 டாக்டர் கரண் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் 28-01-2006 முதல் 27-01-2012 வரை
4 சஞ்சய் சிங் ஆம் ஆத்மி கட்சி 28-01-2018 முதல் 27-01-2024 வரை
5 என். டி. குப்தா ஆம் ஆத்மி கட்சி 28-01-2018 முதல் 27-01-2024 வரை
6 சுசீல் குப்தா ஆம் ஆத்மி கட்சி 28-01-2018 முதல் 27-01-2024 வரை
  • மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.


இதையும் பார்க்க