புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர்கள்
மாநிலங்களவை, இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆட்சிப்பகுதிக்கும் இந்திய அரசியலமைப்பின் படி சில இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மற்றும் புதுச்சேரிக்கு அவையில் ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது ஒரு கட்சி சட்டப் பேரவையில் வைத்திருக்கும் இருக்கைகளின் எண்ணிக்கையால் மேலவையிற்கு தேர்ந்தெடுக்கப்படும் இருக்கை தீர்மானிக்கப்படுகிறது.[1]
மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்
எண் | பெயர் | நியமனத் தேதி |
ஓய்வு தேதி |
காலம் | கட்சி | |
---|---|---|---|---|---|---|
1 | பி. ஆப்ரகாம் | 7 ஆகத்து 1963 | 6 ஆகத்து 1969 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | |
2 | எசு. சிவப்பிரகாசம் | 7 ஆகத்து 1969 | 6 ஆகத்து 1975 | 1 | திராவிட முன்னேற்றக் கழகம் | |
3 | வி. பி. எம். சாமி | 28 சூலை 1977 | 27 சூலை 1983 | 1 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
4 | வே. நாராயணசாமி | 5 ஆகத்து 1985 | 4 ஆகத்து 1991 | 1 | இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) | |
5 ஆகத்து 1991 | 4 ஆகத்து 1997 | 2 | ||||
5 | சி. சி. திருநாவுக்கரசு | 7 அக்டோபர் 1997 | 6 அக்டோபர் 2003 | 1 | திராவிட முன்னேற்றக் கழகம் | |
(4) | வே. நாராயணசாமி | 7 அக்டோபர் 2003 | 16 மே 2009[a] | 3 | இந்திய தேசிய காங்கிரசு | |
6 | பி. கண்ணன் | 7 அக்டோபர் 2009 | 6 அக்டோபர் 2015 | 1 | ||
7 | என். கோகுலக்கிருஷ்ணன் | 7 அக்டோபர் 2015 | 6 அக்டோபர் 2021 | 1 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
8 | எஸ். செல்வகணபதி | 7 அக்டோபர் 2021 | 6 அக்டோபர் 2027 | 1 | பாரதிய ஜனதா கட்சி |
- ↑ மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
மேற்கோள்கள்
- ↑ Rajya Sabha At Work (Second ed.). New Delhi: Rajya Sabha Secretariat. அக்டோபர் 2006. p. 24. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2015.
வெளியிணைப்புகள்
- இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் மாநிலங்களவை முகப்புப்பக்கம்
- மாநிலங்களவை அவர்வில் இருக்கும் உறுப்பினர்களின் பட்டியல் (கால வாரியாக)
- மாநிலங்களவை உறுப்பினர்கள் (மாநில வாரியாக ஓய்வுபெற்றோர் பட்டியல்)